பிராய்லர் கோழி வளர்ப்பதில் நல்ல லாபம் கிடைக்கிறது

பிராய்லர் கோழி வளர்ப்பதில் நல்ல லாபம் கிடைப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி பகுதியில், செட் அமைக்கப்பட்டு அதன் மூலம் பிராய்லர் கோழி வளர்க்கப்படுகிறது. கோழி குஞ்சு மற்றும் தீவனம் ஆகியவை கோழி கம்பெனியிலிருந்து பெற்றுக் கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

40 நாள் முதல் 45 நாட்கள் வரை பராமரித்து வளர்க்கப்படும் கோழிக்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலவாகுவதாக கூறப்படுகிறது. குறைந்த ஆட்கள் மற்றும் குறைந்த அளவிலான தண்ணீர் மூலம், 40 நாட்களில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

Exit mobile version