சென்னை மாவட்டத்தில் 39,40,704 வாக்காளர்கள் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை மாவட்டத்தில் 39,40,704 வாக்காளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டமான சென்னையில் 39,40,704 வாக்காளர்கள் உள்ளதாக கூறினார்.

சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக வேளச்சேரியும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதியும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,06,189 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் 1,51,535 ஆண் வாக்காளர்களும், 1,54,571 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 83 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

குறைவான வாக்காளர்களை கொண்ட துறைமுகம் தொகுதியில் மொத்தமுள்ள 1,73,481 பேரில் ஆண்கள் 90,335 பேரும், பெண்கள் 83,094 பேரும், மூன்றாம் பாலித்தனவர் 52 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version