உலக புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

உலக புகழ் பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டும் பங்கேற்று விளையாடி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை வென்ற உற்சாகத்துடன், சொந்த மண்ணில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கிறது. உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய பழிதீர்க்கும் என்பதால் ஆஷஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Exit mobile version