சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87 அடியாக குறைவு

மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87 அடியாக குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சிமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கஜா புயலால் பெய்த கனமழையால் சோத்துப்பாறைஅணை 126 அடியான முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின்
நீர்மட்டம் 87.41 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 46.43 மில்லியன் கன அடியாகவும், அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version