ஒரு லட்சம் நாட்டு மரங்கள் நடும் பணியில் தன்னார்வ அமைப்பினர்

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக, ஒரு லட்சம் நாட்டு மரங்களை வன தன்னார்வ அமைப்பினர் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயல் தாக்கியபோது திருவாரூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சேதமடைந்தது. இந்த மிகப்பெரிய இழப்பினால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக பல்வேறு அமைப்பினரும் மரங்கள் நடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருவாரூரை சேர்ந்த வன ஆர்வலர் கலைமணி, தனது தன்னார்வ அமைப்பு சார்பில், ஒரு லட்சம் மரக் கன்றுகளை நடும் பணியை 22ம் தேதி திருவாரூர் நகர் பகுதியில் தொடங்கினார். 2ஆம் கட்டமாக ஆனைவடபாதி கிராமத்தில் மரங்கள் நடும் பணிகளை மேற்கொண்டனர்.

 

Exit mobile version