அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் மற்றும் உலக அளவில் பங்கு சந்தை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரிக்கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு வரவில்லை.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடந்து வரும் மோதல்களால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 74 காசுகளாக உள்ளது.
இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதில் பெரும் சிக்கல் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version