அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் முடக்கம்

அமெரிக்காவில் அரசின் செலவில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், டிரம்ப் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.

நிர்வாக முடக்கம் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க நிர்வாக முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரு அவைகளும் கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபை எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version