செங்கல் சூளைகளால் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக வேதனை

செங்கல் சூளைகளுக்கு மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இங்கு செங்கல் தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் செங்கல் தொழிலால் இங்குள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வறட்சி நீடித்து விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மரங்களை அதிகளவில் பயன்படுத்துவதை குறைத்து நிலக்கரியை பயன்படுத்தினால் பசுமையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version