இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பின் தீவிரவாதிகள், இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டு அரசுக்கு தெரியாமல் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் செயல்பட முடியாது என்றார்.
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்தபோதும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதனிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக நம்பகமான உளவு தகவல் கிடைத்ததாக சுட்டிக் காட்டிய விஜய் கோகலே, இந்த சூழலில் தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றார்.
ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவினரான மௌலானா யூசுப் அசார் தலைமையில் பாலாகோட்டு பயிற்சி முகாம் செயல்பட்டு வந்ததாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.
Discussion about this post