ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 78 லட்சம் கையாடல் செய்த கோயில் ஊழியர்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஊழியர்களின் வருங்கலா வைப்பு நிதிப் பணத்தைக் கையாடல் செய்ததாக தற்காலிக ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர்கள் அர்ச்சகர் என 89 பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர் சேமநல நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேமநல நிதிக்காக, கோயில் நிர்வாகம் செலுத்த வேண்டிய பணம் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை இ.பி.எப் அலுவலகம் தெரிவித்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், கணினி பிரிவில் வேலை பார்த்து வந்த தற்காலிக ஊழியர் சிவன் அருள்குமரன், பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக, 78 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. சிவன் அருள்குமரனைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version