தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டது

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டதால், அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கேட்டுக் கொண்டுள்ளார். இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்அப் என்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் வழக்கொழிந்த நிலையில், மீண்டும் அந்த பழக்கத்தை அறிமுகப்படுத்த தபால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், திருவிதாங்கூர் சமாஸ்தான காலத்தில் கடித பயன்பாட்டில் இருந்த போஸ்ட் பாக்ஸ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. அதனை மீண்டும் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அவற்றை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டர்நெட், இ-மெயில் தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டதை சுட்டிக் காட்டினார். எனவே, அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version