தென்கொரியாவின் பிரபல பாப் பாடகியும், நடிகையுமான சல்லி தனது 25 வயதிலேயே மரணமடைந்துள்ளது உலகம் முழுவதும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோய் ஜின்-ரி என்ற இயற்பெயருடைய Sulli 2005ம் ஆண்டு தனது 11 வயதில் சில்லாவின் இளவரசி சியோன்வா என்ற எஸ்.பி.எஸ் நாடகமான பாலாட் ஆஃப் சியோடாங்கில் நடித்து பிரபலமானார். பின் பாடகியாக 2009ல் பெண் இசைக்குழுவான எஃப் (எக்ஸ்) உறுப்பினராக அறிமுகமானார். அவரின் பாடல்களில் Electric Shock, Hot Summer ஆகியவை புகழ் பெற்றவை.2014ம் ஆண்டிற்கு பிறகு எஃப் (எக்ஸ்) குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
2014ம் ஆண்டு வரை தென்கொரியாவின் புகழ்பெற்ற பாடகியாக வலம் வந்த சல்லி பிறகு நடிகையாக தனது இன்னொரு பரிணாமத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். மேலும் உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ட்விட்டரில் Sulli பெயரில் Hashtag ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post