"Me Too" வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் -பெண்கள் தின சிறப்பு கட்டுரை

சமீபத்தில் பல பிரபலங்களுக்கு எதிராக மீடூ பிரச்சனைகள் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டி பறந்தது.பெண்கள் அவர்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை #METOO ஹாஸ்டாக் மூலம் சொல்ல தொடங்கினர்.பொதுவாக பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவு போன்றவற்றை வெளியில் சொல்வதில்லை.அப்படியே சொன்னாலும் பெண்ணின் மீது ஒரு தவறான கருத்து அனைவருக்கும் ஏற்படுகிறது.அவர்களின் புகாரை அவமதிப்பது போன்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

நீ ஏன் இத்தனை நாள் புகார் கொடுக்கவில்லை? அந்த இடத்திற்கு ஏன் சென்றாய் ? என பல கேள்விகளை முன் வைக்கின்றனர் .ஒருவரின் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு எழும் போது, இச்சமூகம் கேள்விகளை பெண்களிடம் மட்டுமே முன் வைக்கிறது.மேலும் புகார் கொடுத்தவர்களிடமே அவரின் ஒழுக்கத்தை நோக்கி கேள்விகளை எழுப்புவது நியாமில்லை.ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவளின் லட்சியமும், எதிர்காலமும் கேள்விக்குறி ஆவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

அதையும் மீறி ஒருவர் துணிச்சலாக புகாரை பதிவு செய்கிறார் என்றால் அதை விசாரித்து உண்மையை உலகிற்கு தெரிவிப்பது தான் இச்சமூகத்தில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டும்.

ஒரு பாடல் சர்ச்சையை உண்டு செய்வது இயல்பு, ஆனால் சர்ச்சைக்காக ஒரு பாடலே இங்கே உருவாகியுள்ளது.அது தான் ’மீடூ’பாடல்.மீடூ வில் புகார் தெரிவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும்,பெண்கள் ஒரு பொருட்காட்சியல்ல என்பதை உணர்த்தும் விதமாகவும் ஸ்வர்ணலதா என்னும் பெண் ’மீடூ’ பற்றி இவரே எழுதி இயக்கியுள்ளர். அவர் ஓவியங்கள் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். “என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை பரிசும் பெற்றுள்ளது.

 

மீடூ பற்றி அரியாத பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இப்பாடல் அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் எழுதியிருப்பது பாராட்டிற்குறியது.மீடூ பாடல் குறித்து அவரிடம் பேசினோம்,அப்போது‘பெண்களை தெய்வமாக போற்றி திகழும் நம் பாரத நாட்டில் பெண்ணின் மீது கலங்கம் ஏற்படுத்தும் விதமாக எவ்வித செயல்களையும் செய்யாதீர்கள் என ஆண்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறிக்கொண்டார்.

பெண்களுக்கு நேரும் அனைத்து பிரச்சனைகளையும் ஒரே பாட்டில் கூறி, அப்பிரச்சனைகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்றும் கூறியுள்ளார்.

 ‘மீடூ இது மீடூ இது
பெண்ணின் தன்மானத்தை காத்து
அவள் கவுரவத்தை எடுத்து வரும் மீட்டு’

‘ஆண்களாலே அசிங்கப் பட்டு
 அவமானங்கள் தாங்கிக் கிட்டு

கிடந்த காலம் போனதம்மா பெண்ணை விட்டு
அவளை காக்க வந்த ஆயுதம் தான் மீடூ’

இப்படி மீடூ அமைப்பானது பெண்ணின் கவுரவத்தையும், அவளின் மீது உள்ள அழுக்கினை தூயப்படுத்தும் ஆயுதமாகவும் திகழ்கிறது.முன்னெல்லாம் ஆண்களின் மீது ஒரு பாலியல் புகாரை தெரிவிப்பதே பெண்ணின் மீது அவளே உண்டாக்கி கொள்ளும் களங்கமாகும்.இன்று மீடூவினால் அந்த களங்கத்தினை துடைக்க முடியும் என்ற நம்பிக்கை பெண்களிடையே எழுந்துள்ளது.

‘வாய்ப்பு கேட்டு வரும் பெண்ணை
 ஏய்த்து பிழைக்க நினைக்கும் ஆணை
 சாய்த்து வீழ்த்த வந்த அதிர்வேட்டு
  சக்தி உந்தன் திரிசூலம் மீடூ

  சக்தி உந்தன் திரிசூலம் மீடூ’ 

நம் சமூகத்தில் சினிமா, அரசியல், ஊடகம் என அனைத்து துறைகளும் ஆணாதிக்கம் நிறைந்தது தான்.வாய்ப்பு கேட்டு செல்லும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் தெரிந்தும்,தெரியாமலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.அவர்களுக்கு நெத்தி அடி கொடுக்கவே உருவாகியுள்ளது மீடூ.

ஒரு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அதனைப் பற்றி வெளிப்படையாக பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பெண்கள் நம்புகின்றனர்.ஆண்கள் தவறு செய்தால் அவர்களின் பெயர் வெளியே தெரிந்துவிடும் என்ற பயம் எப்போது அவர்களின் மனதில் எழுகிறதோ அன்றே பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுகளவு முற்றுப்புள்ளியாவது வைக்க இயலும்.

Exit mobile version