மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்துக்கு, தமிழகம் முழுவதும் கடும் தட்டுபாடு நிலவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வழங்கப்படும் மருந்துகளை வாங்குவதற்காக தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் குவிந்தனர். ஆனால் அனைவருக்கும் மருந்து கிடைக்காத நிலையில், அதிருப்தியடைந்த மக்கள் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.