முதுகுளத்தூர் பேரூராட்சியில் விளை நிலங்களில் கழிவு நீர் கலந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள நிலங்களில், பருத்தி, மிளகாய் போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் போதிய வடிகால் வசதியின்மையால் விவசாய நிலங்களில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, கழிவுநீரை முறையாக வடிகால் அமைத்து, வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.