இந்தியாவின் மருத்துவம் மற்றும் கல்வித் தரம் சர்வதேச அளவில் உள்ளது: சார்ஜா இளவரசி

இந்தியாவின் மருத்துவம் மற்றும் கல்வித் தரம் சர்வதேச அளவில் உள்ளதாக சார்ஜா இளவரசி அல் கஸிமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் சார்ஜா இளவரசி, சேக்கா ஹெண்ட் அல் கஸிமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியர்களின் கலாசாரம், விருந்தோம்பல் முதலியவை பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவின் மருத்துவ சேவை மற்றும் கல்வியின் தரம் சர்வதேச அளவில் உள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

Exit mobile version