தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 2 ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக ஏராளமான மக்கள் ஒன்று கூடி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்பித்து வருகின்றனர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் ஊக்கத்தொகையை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post