விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டியில், தண்ணீர் நிரப்ப வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளில் பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் முந்தைய காலங்களில் விலங்கினங்களுக்கென அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளில் வன விலங்குகள் தண்ணீர் குடித்து வந்தது. தற்போது அந்த குடிநீர் தொட்டிகளில் மழை பெய்யாததால் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது, இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால், விலங்குகளுக்கென அமைக்கப்பட்ட அந்த குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version