சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்து அசத்திய பி.வி.சிந்து

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அண்மையில் உலகின் முதல் 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். சீன தைபேவின் தாய் ஜூ யிங் முதலிடத்திலும், ஜப்பானின் நஜோமி ஒகுஹரா இரண்டாவது இடத்திலும், உள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 9–வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8 வது இடத்திலும், சமீர் வர்மா 12 வது இடத்திலும் உள்ளனர்.

 

Exit mobile version