தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version