உலகத்திலேயே மிக நீளமான வீட்டு பூனை

உலகத்தின் மிக பெரிய வீட்டு பூனை என்ற சாதனையை படைத்துள்ளது, இத்தாலியை சேர்ந்த பரிவேல் பூனை. வடக்கு இத்தாலியில் வசிக்கும் “எட்கர்” தம்பதி வளர்க்கும் இந்த பூனையின் நீளம் 120 சென்டிமீட்டர்.

“மக்கள் முதலில் பரிவேலை பார்த்த உடனே அதிர்ச்சி அடைவார்கள். காரணம் அதன் அமைப்பு. இருப்பினும் எங்களுக்கு இந்த பூனை மிக பெரும் வாரமாகவே பார்க்கிறோம்” என்று கூறுகிறார் பரிவேலின் உரிமையாளர் எட்கர். “மேலும் இதை பார்க்கும் மக்கள் உடனே ஓடி வந்து பூனையை கையில் வைத்து கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். மீன் மற்றும் பிஸ்கேட் என்பது எங்கள் பரிவேல் பூனை விரும்பி உண்ணும் உணவு.

பரிவேல் பூனையிடம் இருந்து நாங்கள் மிகுந்த அமைதியாய் இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம்” என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார் பரிவேலை வளர்க்கும் எட்கர்.

Exit mobile version