ஈரோடு அருகே உடையாம்பாளையத்தில் இரு தலையுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் அதியமாக பார்த்துச்செல்கின்றனர்.உடையாம்பாளையத்தில் ரங்கம்மாள் என்ற விவசாய பெண்மணி வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று, அண்மையில் இருதலைகளுடன் வெள்ளாட்டுக் குட்டியை ஈன்றுள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, இருதலையுடன் உள்ள ஆட்டுக்குட்டிக்கு, புட்டியில் பால் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்து, அப்பகுதியினர் ஆர்வமுடன் ரங்கம்மாளின் வீட்டிற்கு வந்து இருதலையுடன் உள்ள ஆட்டுக்குட்டியைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இருதலையுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி: பார்வையிட அலைமோதும் மக்கள்
-
By Web Team

Related Content
ஆட்டுக்குட்டியை கடவுளின் அவதாரமாக பார்க்கும் கிராம மக்கள்
By
Web Team
January 23, 2020