கர்நாடகாவில் நிலவும் அரசியல் பரபரப்பான சூழலில் சட்டமன்ற கூட்டம் நாளை கூடுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் மத சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் உறுப்பினர்களை இழுத்து ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக எழும் சர்ச்சைகளால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில், கர்நாடக சட்டமன்றம் நாளை கூடுகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை வெள்ளியன்று முதலமைச்சர் குமாரசாமி தாக்கல் செய்கிறார். இதன் மீதான விவாதங்கள் வரும் நாட்களில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சில எம்.எல்.ஏக்கள் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்று கூறி வருவது கூட்டணி ஆட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.