நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 என்ற வளர்ச்சியை எட்டும் என்று, சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும், 2019ம் ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம் கூறியுள்ளது.
முதலீடு அதிகரிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி நடப்பாண்டில் பூஜ்யம் புள்ளி 7 சதவீதமும், அடுத்த ஆண்டு 1 புள்ளி 2 சதவீதமும் அதிகரிக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம் குறிப்பிட்டுள்ளது.