தஞ்சையில் ரூ.6 கோடி மதிப்பில் பிள்ளை வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

தஞ்சை அருகே உள்ள பிள்ளைவாய்க்கால் 6 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வெண்ணாற்றில் இருந்து பிரியும் பிள்ளைவாய்க்காலின் இரு புறங்களும் கான்கீரிட் அமைத்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு 6 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

23 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வாய்க்காலின் இரு கரைகளிலும் நிலத்திற்குள் தண்ணீர் செல்லும் வகையிலான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நில அதிர்வுகளால் பாதிக்கப்படாத வண்ணம் நவீன முறையில் அமைக்கப்பட்டு வரும் இதன் கட்டுமானப் பணிகள், நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

Exit mobile version