கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் திண்டுக்கல் பகுதிகளில் மும்முரமாக நடைபெறுகிறது.
ஆத்தூர் தொகுதிக்குட்பட்டது தர்மத்துப்பட்டியில் மண்பாண்ட தயாரிப்பு தொழில் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. முன்பு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தநிலையில் தற்போது அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வரவால் மண்பாண்ட பொருட்களுக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாக கூறுகிறார்கள்.
வரும் 10ம் தேதி திருக்கார்த்திகை வருவதால் காலத்திற்கு ஏற்பஅகல் விளக்கு, வினாயகர் விளக்கு, லிங்க விளக்கு, பஞ்சமுக விளக்கு, அன்னவிளக்கு, மேஜிக் விளக்கு போன்ற பலவகையிலான விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் மண் விளக்கேற்றுவதன் மூலம் வீட்டிற்கு லெட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதுடன் தங்களது வாழ்வாதாரமும் உயரும் என்று கூறுகின்றனர்.