வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு -மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி உள்பட வட மாநிலங்களை கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது குளிர்காலம் என்பதால் வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசாக இருக்கிறது. உத்தர பிரதேசம், காஷ்மீரில் குளிர் வாட்டி வதைக்கிறது.டெல்லியில் 1 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்படும் ஏராளமான விமானங்கள் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் போர்வை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

Exit mobile version