ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை அரசு மதிக்க வேண்டும் -விரால் ஆச்சார்யா

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை அரசு மதிக்காவிட்டால் பொருளாதார சந்தையில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், அரசும் ரிசர்வ் வங்கியும் இருவேறு தளங்களில் செயல்படுவதால் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிட கூடாது என்றார். அரசின் செயல்பாட்டை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடனும், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டை டெஸ்ட் போட்டியுடனும் ஒப்பிட்டு பேசிய விரால் ஆச்சார்யா, ஒவ்வொரு இன்னிங்சிலும் வெற்றி பெறும் நோக்கில் ரிசர்வ் வங்கி செயல்படுவதாக தெரிவித்தார்.

மேலும் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை அரசு மதிக்காவிட்டால் பொருளாதார சந்தையில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

Exit mobile version