இலங்கை இராணுவத்தின் 70-வது ஆண்டு விழா தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில், ராணுவ படையினரின் அணிவகுப்புடன் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை அந்நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் விழாவில் பேசிய அவர், எதிர்காலத்தில் எந்தவிதமான அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான இராணுவத்தை அமைப்பதே இலக்கு என்று கூறினார்.
பலமான ராணுவத்தை அமைப்பதே இலக்கு: இலங்கை ராணுவ தளபதி
