ஜி 8 நாடுகள் மீண்டும் ஜி 7 நாடுகளாக மாறியது

ஜி 7 என்பது முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், ஏழு நாடுகளை கொண்ட அமைப்பு. அதாவது, Group Of seven. இதில், பிரான்ஸ் , அமெரிக்கா , ஜப்பான் , ஜெர்மனி , பிரிட்டன் , கனடா , இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. முதன்முதலில் 1975 ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்கா தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடின.

அதற்கு அடுத்தாண்டு, கனடா இந்த அமைப்பில் இனைந்தது அதன் பின்னர், 1998 ல் உறுப்பினராக ரஷ்யா, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை 2014ல் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டதால், ஜி 8 அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், ஜி 8 நாடுகள் மீண்டும் ஜி 7 ஆனாது.

ஒவ்வொரு ஆண்டும், ஜி 7 மாநாடு நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் 3 நாட்கள் மாநாடு நடக்கிறது. இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை என்றாலும், நட்பு நாடு என்ற முறையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி நாளை சுற்றுச்சூழல், காலநிலை, டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜி 7 உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் திசை திருப்பும் நிலையில், பிரதமர் மோடி உலக நாடு தலைவர்களை சந்தித்து பேச இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜி 20 யில் உறுப்பு நாடாக உள்ள சீனா , ஜி 7 மாநாட்டில் இடம் பெறவில்லை. காரணம், உலகின் அதிக மக்கள் தொகை மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எனினும் தனிநபர் சொத்து என்பது குறைவாக இருக்கிறது. ஜி 7 உறுப்பு நாடுகளின் மேம்பட்டிருக்கும் அளவிற்கு சீனா இல்லை என்பதால் அந்நாடு இந்த அமைப்பில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version