சென்னையில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை மீனரங்கத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் விஜிபி குழுமம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெரிய அளவில் நீருக்கடியிலான மீன் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 115 கோடி மதிப்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் அரங்கத்தில் வெளிநாடுகளில் இருப்பது போல் நீருக்கு அடியில் சென்று பல்வேறு வண்ண மீன்களை காணும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதன் துவக்க விழாவில் விஜிபி சந்தோசம் மற்றும் விஜிபி குழும நிர்வாகிகள் இயக்குனர்கள் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.