தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பெருமாள் சிலையை காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வகை தருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும் விஸ்வரூப கோதண்டராமர் பெருமாள் சிலை, கடந்த நவம்பர் மாதம் புறப்பட்டு, தற்போது சூளகிரி அருகே சாம்பல் பள்ளம் முனியப்பன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிறிய பாலத்தை கடக்க நெடுஞ்சாலை துறை அனுமதி மறுத்ததால், புதியதாக தற்காலிக பாலம் அமைத்து அதன் வழியே பிரம்மாண்ட சிலையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கடந்த நான்கு தினங்களாக கோதண்ட ராமர் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.