கல்வராயன்மலைப் பகுதியில் 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் கிராம கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெதுர் மதுவிலக்கு காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் சாராயம் காய்ச்சுவதற்காக சின்டக்ஸ் டேங்குகளில் போடப்பட்டிருந்த 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து, அழித்தனர். பின் வெதுர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், முருகன், முனுசாமி ஆகிய 3-பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.