ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அக்னி சுற்றி வந்து உறவினர்களின் வாழ்த்துக்களுடன், இணையும் இரு உள்ளங்களின் வாழ்க்கையில் பல சந்தோஷமான தருணங்களும், மறக்கமுடியாத நினைவுகளும் ஏற்படும்.ஆனால்,இங்கு ஒரு தம்பதியினர் கல்யாணத்திற்கு முன்பே அல்டிமேட் அட்வென்ஞ்சரை அனுபவித்துள்ளனர்.
கேரளாவில் திஜின்,சில்பா தம்பதியினர் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பின் (pre wedding shoot ) போது தான் அந்த சிரிக்க வைக்கும் காட்சி நிகழ்ந்துள்ளது.
இருவரும் நதியின் நடுவே வாழை இலையை தலையின் மேல் பிடித்து கொண்டு படகில் அமர்ந்திருந்தனர்.இருவரையும் போட்டோவிற்கு போஸ் கொடுக்க சொல்லிக்கொண்டிருந்தனர்.அப்போது,மழை பொய்வது போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்களின் மேலே தண்ணீரை அள்ளி தெளித்தனர்.அப்போது எதிர்பாராமல் இருவரும் அப்படியே தண்ணீரில் விழுந்துவிட்டனர்.தண்ணீரில் மூழ்கிய தம்பதியினர்,பின்னர் சிரிப்பிலும் மூழ்கிவிட்டனர்.படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.