ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 30, 704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்ததை அடுத்து, இன்றும் சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 4,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 32, 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 3, 838 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 30,704 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொருத்தவரை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 49 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 49,000ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version