சர்ச்சைக்குள்ளான ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகள்- பரிசோதனை செய்ய முடிவு

இந்தியாவில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு,ஆயில் போன்றவற்றை தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளால் கேன்சர் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், செய்திகள் வெளி வந்தன. இதனையடுத்து, இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி (Baddi) நகரில் உள்ள அந்நிறுவனத்தில் மருந்து பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, நவ்நீத் மர்வஹா, வெளிநாடுகளில் இருந்து வந்த செய்திகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கூடத்தின் சோதனையில் இது நிரூபணம் ஆகியிருப்பதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Exit mobile version