ராஜஸ்தானில் கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

 ராஜஸ்தானில் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆதரவுடன்  ஆட்சியமைக்கிறது. 

200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக 73 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள் 13 இடங்களிலும், இதர கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 

Exit mobile version