ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்ட படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

ஈரோட்டில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் ஏரியில் சுற்றுச்சூழல் துறை சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நடைப்பாதை, படகு சவாரி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டுள்ளதால் ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.

எனவே ஈரோடு பகுதி மக்களின் ஒரே முக்கிய பொழுபோக்கு அம்சமாக திகழும் இந்த படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version