தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 68 வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் பொது வாழ்விலும் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றும் வண்ணம் அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version