கீழடியில் உருவாகும் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார். கீழடி ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில், 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது கண்டெடுக்கப்பட்ட குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், நாணயம், மணிகள், எலும்புக்கூடுகள், உள்ளிட்டவைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்க அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கீழடியில் உருவாகவுள்ள அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Exit mobile version