சென்னை கோயம்பேட்டில், 485 கோடி ரூபாய் மதிப்பிலான 3ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
3ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் 3ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய முதலமைச்சர், நதிநீர், குடிநீர் மற்றும் கழிவு நீர் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டது அதிமுக அரசு தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.