கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு முதலில் வழங்க வேண்டும் -பினராயி விஜயன்

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 25 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்ட நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து, பேரிடர் நிவாரண நிதியாக 2 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்றதாக கூறினார். இந்தநிலையில் பெருவெள்ளத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக 33 கோடியே 79 லட்சம் ரூபாயை கட்டணமாக விமான படை கோருவதாக சுட்டிக் காட்டிய பினராயி விஜயன், இதேபோல் ரேசன் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்ததற்காக, மத்திய அரசு 290 கோடி ரூபாய் கேட்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை முதலில் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version