கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக இந்தத் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக கோரப்பட்டது. இந்த நிலையில், 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version