வடசென்னையில் கெட்ட வார்த்தை தான் பயன் படுத்துவார்கள் – நடிகர் ராதா ரவி

வடசென்னை திரைப்படத்தில் ஆபாச சொற்கள் இடம்பெற்றது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், வடசென்னையில் அத்தகைய வார்த்தைகள் தான் பேசப்படுகிறது என்றும் இதனை தைரியமாக திரையில் பதிவு செய்த வெற்றிமாறனை பாராட்டுவதாக நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

மதுரை ,கோயம்பத்தூர்,திருநெல்வேலி ஆகிய நகரங்களில் எவ்வாறு பேசப்படுகிறதோ அவ்வாறு தான் சினிமாவிலும் காட்டமுடியும்.அதே போலதான் வடசென்னை படத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version