கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,943 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும் மேட்டூர் அணைக்கு 7,510 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 6,943 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலுக்கு அவ்வபோது நீர்வரத்து அதிகரிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க விதிக்கபட்ட தடை 108 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version