திமுக,காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே அதிமுகவின் லட்சியம்

தமிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்த திமுக,காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே அதிமுகவின் லட்சியம் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி ஆரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழ் இனத்திற்கு வராத பேரழிவு திமுக,காங்கிரஸ் கூட்டணி காலத்தில் நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டினார். அதிமுக,தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version