40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

மக்களவை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளதாகவும் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா, சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறை இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் 79 ஆயிரம் கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளதாகவும், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version