நாமக்கல் மாவட்டத்தில் ரூ.488 கோடி திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் – ஆயத்த பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 488 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி வரும் 18ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஆயத்தபணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு பகுதிக்கு உட்பட்ட ஆலம்பாளையம், படைவீடு, சங்ககிரி பேரூராட்சி, பள்ளிபாளையம் ஒன்றியம் உள்ளடக்கிய பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டம் 399 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது.

87 கோடி ரூபாயில் திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கு தனி குடிநீர் அபிவிருத்தி திட்டமும், 2 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும், நவம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்கான நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார்.

 

 

Exit mobile version