சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 7 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 3 ஆம் தேதி ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சி.டி.மணியின் கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அனைவரையும் 5 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காவல் முடிந்து 7 பேரும் சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெயசுதாகர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.