கரடிகளை கண்டதும் தானாக பிரேக் பிடித்து நின்ற டெஸ்லா தானியங்கி வாகனம்

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று கரடிகளைக் கண்டதும் தானாக பிரேக் பிடித்து நின்றது. ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் ஆட்டோ பைலட் கார், மோண்டானா மாகாணத்தின் சாலையில் உடா என்ற இடத்தில் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காட்டுக்குள்ளிருந்து வெளியேறிய ஒரு கிரிஸ்லி கரடியும் அதன் இரு குட்டிகளும் சாலையில் உலாவிக் கொண்டிருந்தன. இதனை காரில் இருந்த சென்சார் உணர்ந்ததும் தானாகவே பிரேக் பிடித்து நின்றது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி டெஸ்லா நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

Exit mobile version